ஸ்ரீ அருணகிரிநாதர்

பாடல்கள்: ஸ்ரீ அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இத்தலத்தின் சிறப்பினை 18 பாடல்களில் சிறப்பித்துள்ளார்கள்.

ஏனைய தலங்களில் திருப்புகழ் பாடும்பொழுது வயலூரையும் குறிப்பிட்டுள்ளார்கள். 33 திருத்தலங்களில் பாடியதில் 55 பாடல்களில் வயலூர் குறிப்பு வருகின்றது.

அருணகிரிநாதர் அருளிய வயலூர் திருப்புகழ் 18 பாடல்களை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
PDF | HTML

திருவானைக்காவல் திரு. அப்புலிங்கம் பிள்ளை (கலைவாணர்) வயலூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஈடுபாடு:
நம்மிடையே வாழ்ந்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் வயலூர் வள்ளல் ஆட்கொண்டு கற்கோயில் கட்டப் பணித்து தன்பணியை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அவர் இத்திருக்கோயிலுக்கு ஆற்றிய திருப்பணிகள் அளவிடற்கரியது.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் குரலைக் கேட்க இங்கு க்ளிக் செய்யவும்.
(MP3 format)